கோவையில் ஓய்வு பெற்ற அரசு பெண் மருத்துவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக கூறி ரூ. 98 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் தினமும் 30-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகின்றன. இதில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, ஆன்லைனில் இருசக்கர வாகனம், கார் விற்பதாக மோசடி உள்ளிட்ட பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கோவையை சேர்ந்த 60 வயதான ஓய்வு பெற்ற அரசு பெண் மருத்துவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக கூறி ரூ. 98 லட்சம் மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், பெண் மருத்துவரிடம் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோத பண பரிமாற்றம் காரணமாக அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகவும், உங்களது வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் எனவும், வங்கிக் கணக்கை சரிபார்த்த பின்னர் பணத்தைத் திரும்ப அனுப்பி விடுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன அவர் பல்வேறு கட்டங்களாக மர்ம நபர்கள் சொன்ன வங்கி எண்ணிற்கு ரூ. 98 லட்சம் அனுப்பி உள்ளார். ஆனால், அதன்பின்பு அந்த நபரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு!