ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா புதிய வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிக்மா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் படம் கடந்த ஜூலையில் வரவிருந்தது. ஆனால், ஜன நாயகன் வெளியீட்டால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சனங்களும் கண்காணிப்புகளும் கடந்து சென்றுவிடும்: நடிகர் துருவ்The release date of the film marking the directorial debut of Jason Sanjay, son of Vijay, has been announced.