சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய 15 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு பருவமழையின்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும். குறிப்பாக நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்யும். இதையடுத்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்பொருட்டு, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 15 அதிகாரிகளை நியமித்துள்ளார். அலுவலக நேரத்திற்கு முன்பாக காலையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதேபோல சென்னையில் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் இந்த அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.Northeast Monsoon: 15 officials appointed to inspect stormwater drain works in Chennai6- வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் கடும் சரிவு!