கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு 12,000 கன அடி நீர் திறப்பு!

Wait 5 sec.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 30 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) 15 நாள்களுக்கு விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. கர்நாடக அரசு இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை.கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை (ஆக.17) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 12,000 கன அடி தண்ணீர் சனிக்கிழமை இரவு முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 2,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.Due to heavy rainfall in the Cauvery catchment areas causing Karnataka's dams to fill up rapidly, 12,000 cubic feet of water per second has been released to Tamil Nadu.ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!