வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது பயணியின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம், அசம்கர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பயணி, தனது மனைவியுடன் ஏர் இந்தியா விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை மும்பை புறப்பட தயாராகவிருந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக சோதனையின்போது அவர் தன்னிடம் கைத்துப்பாக்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். துப்பாக்கியும் அதன் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டபோது தவறுதலாக வெடித்துள்ளது. துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டா முதலில் தரையில் பட்டு, பின்னர் அருகில் நின்றிருந்த இரு ஊழியர்கள் மீது பாய்ந்தது. இதில் பெண் ஊழியர் ஒருவரின் தொடையிலும், ஆண் ஊழியரின் கையிலும் காயம் ஏற்பட்டது.காயமடைந்த இரு ஊழியர்களின் நிலையும் சீராக உள்ளதாகவும், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாரணாசி விமான நிலைய இயக்குநர் குப்தா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் வாரணாசி விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. Two people were injured after a gun carried by an Air India passenger went off during a weapons check at Varanasi airport on Sunday.அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து