ஸ்பிரிட் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு! உடற்பயிற்சியில் பிரபாஸ்!

Wait 5 sec.

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பான் ஆசிய திரைப்படமாக உருவாகி வருகிறது.இப்படத்தின் நாயகியாக முதலில் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின், தீபிகா விதித்த நிபந்தனைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்து வராததால் நடிகை டிருப்தி திம்தி ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதால் தயாரிப்பு பணிகளில் தொய்வில்லாமல் செல்கிறது.இதில், பிரபாஸ் காவல்துறை அதிகாரியாகவும் பிளாஷ்பேக் காட்சிகளில் கல்லூரி மாணவராகவும் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் இதற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் பயிற்சியில் பிரபாஸ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சோனி விழா - தொலைக்காட்சியில் புதிய சேனல்! Information has emerged regarding the next phase of filming for the movie Spirit, starring actor Prabhas.