அடுத்தடுத்து ஓடிடியில் ஸ்ரீ கௌரி பிரியாவின் காதல் திரைப்படங்கள்!

Wait 5 sec.

நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்த 'சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சென்னை லவ் ஸ்டோரி. இதில், நாயகனாக கிரண் அப்பாவரமும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியாவும் நடித்திருந்தனர். தெலுங்கில் முழுநீளக் காதல் திரைப்படமாக கடந்த ஜூலை 24 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. இப்படம் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தெலுங்கில் காதல் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படமும் கணிசமான லாபத்தை அடைந்தது. வளர்ந்துவரும் நடிகரான கிரண் அப்பாவரத்தின் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடினர். இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வருகிற ஆக. 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் ’மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் வெற்றியைக் கொடுத்துள்ளார். இதற்கிடையே, ஜிவி பிரகாஷ் உடன் இவர் நடித்த ஹேப்பி ராஜ் திரைப்படமும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அப்படம் ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியாக அடுத்த சில மாதங்களிலேயே தன் இன்னொரு வெற்றிப்படத்துடன் கௌரி ப்ரியா வரவுள்ளார். தொடர்ந்து, இவர் காதல் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்பிரிட் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு! உடற்பயிற்சியில் பிரபாஸ்!