சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “முதல் நாளிலேயே எங்கள் தோல்வி தொடங்கிவிட்டது” எனக் கூறியுள்ளார். டார்வினில் கடந்த ஆக.13ல் தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் 426 ரன்கள் குவித்தது. இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, வங்கதேசம் 57 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. சொந்த மண்ணில் முதல்முறையாக வங்கதேசத்திடம் தோல்வியுற்றது குறித்து ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியிருப்பதாவது: அநேகமாக முதல் நாளிலேயே எங்களது தோல்வி தொடங்கிவிட்டது. உங்களுக்குத் தெரியுமா, எங்களது முன் தயாரிப்புகள் நன்றாகவே இருந்தது. சிறப்பாகவே பயிற்சி செய்ததாக நினைத்தேன். அதைக் காரணமாக கூறவில்லை. வங்கதேச அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். முதல்நாளில் ஆடுகளம் எதிர்பார்த்ததைவிட சிறிது முன்பாகவே வேலையைக் காட்டியது. ஆனால், நிச்சயமாக நாங்கள் நிண்ட நேரம் பேட்டிங் செய்ய முயற்சித்தோம். பந்தை ஊடுருவி செல்ல எங்களால் முடியவில்லை. ஆனால், வங்கதேசம் நன்றாக விளையாடினார்கள். இப்போதுதான் போட்டி முடிவுற்றுள்ளது. மற்ற விஷயங்களை எல்லாம் ஆராய வேண்டும். நாங்கள் கம்பேக் அளிப்பதில் சிறந்தவர்கள். எங்கு முன்னேற வேண்டுமென நிச்சயமாக சிந்திப்போம் என்றார். டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம்: வங்கதேச கேப்டன் Australia captain Pat Cummins share his thoughts on Historic lose against Bangladesh