ஆசிரியரிடம் குறைந்த முதலீட்டில் அதிகலாபம் பெறலாம் எனக்கூறி ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம் க.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (52). ஆசிரியரான இவருக்கு, முகநூலில் கவிதா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்ததாம். இதையடுத்து அந்த எண்ணில் தொடா்பு கொண்ட போது, குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறினாராம். இதையடுத்து, அவா் பல தவணைகளாக அந்த பெண் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை செலுத்தினாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து, ராஜேஷ்கண்ணன் தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.