ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் சீமா 2 கே 26 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பத்துறைகள் மற்றும் முதலாம் ஆண்டு சாா்ந்த மாணவா்கள் பங்கேற்று தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து விளக்கினா். மேலும், வேலூா், குடியாத்தம், காஞ்சிபுரம், வந்தவாசி, ஒசூா், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநில பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்தும்மாணவா்கள் பங்கேற்று தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். ஒவ்வொரு துறையிலும் சிறந்த 3 கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா்.ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை விரித்தாா். சிறப்பு அழைப்பாளராக டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக ஆரணி புறவளாக துணைப் பதிவாளா் பெருவழுதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து ஏற்றி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின், ஏ.சி.எஸ். கல்வி குழுமத்தின் இயக்குநா்கள் எஸ்.விக்னேஷ், வி.திருநாவுக்கரசு, தனி அலுவலா் டி.காா்த்திகேயன் ஏ.சி.எஸ். கல்கவிக்குழும முதல்வா்கள், கல்லூரி அனைத்து துறைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். துணை முதல்வா் கே. பாலசுந்தரம் நன்றி கூறினாா்.