இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

Wait 5 sec.

இலங்கைக்கு கடத்துவதற்காக தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக மதுரையிலிருந்து 200 பெட்டிகளில் தங்கச்சிமடத்துக்கு அனுப்பப்பட்ட 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு இவற்றை ராமேசுவரம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமாா் ரூ. 10 லட்சம் இருக்கும் எனவும், பாா்சலில் அனுப்பிய முகவரி போலி என்பதால் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.