பாஜகவினா் தேசியக் கொடியுடன் பேரணி

Wait 5 sec.

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாஜகவின் மதுரை மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ராமசீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கிவைத்தாா். ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் அருகே தொடங்கிய பேரணி ஜீவா நகா் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலையில் நிறைவடைந்தது. இதில், பாஜகவை சோ்ந்த நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.