சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவினர் உயிர்காக்கும் அவசர மூச்சுக்குழாயில் புகுந்த பேனா மூடியை அகற்றி சாதனை படைத்தனர். பேனா மூடியை தவறுதலாக சுவாசக் குழாயில் இழுத்துக்கொண்ட 15 வயது சிறுவன், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆக. 13 அன்று இரவில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.மருத்துவமனைக்கு வந்தபோது சிறுவன் அமைதியின்றி, கடுமையான மூச்சுத்திணறல், ஸ்ட்ரைடர் (Stridor) மற்றும் மூச்சு இரைப்பு (Wheezing) ஆகிய அறிகுறிகளுடன் இருந்தார். இவை தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான மூச்சுக்குழாய் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகளாகும்.உடனடியாக மேற்கொள்ளப்பட்ட அவசர சிடி ஸ்கேன் பரிசோதனையில் வலது பிரதான மூச்சுக்குழாயில் (Right Main Bronchus) பேனா மூடி சிக்கியிருந்ததுடன், அது வலது நுரையீரலின் கீழ் மடலுக்குச் செல்லும் மூச்சுக்குழாய் (Right Lower Lobe Bronchus) வரை நீண்டு, ஆழமாகப் பதிந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. வெளிப்பொருள் மிகவும் ஆழமாகவும் இறுக்கமாகவும் பதிந்திருந்ததால், அதனை அகற்றுவது மிகவும் சவாலானதாக இருந்தது.வெளிப்பொருளின் கடினமான இருப்பிடம் மற்றும் உயிருக்கு ஆபத்தான மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த சிகிச்சைக்கு மிகுந்த திறமை, தொழில்நுட்ப நிபுணத்துவம் சிகிச்சையில் நீண்டகால அனுபவம் தேவைப்பட்டது.மயக்கவியல் துறையினருடன் கலந்தாலோசித்து, அவர்களின் ஒப்புதலுடன், நோயாளி உடனடியாக அவசர உயிர்காக்கும் வெளிப்பொருள் அகற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.மிகவும் சவாலான இந்த சிகிச்சைக்குப் பின்னர், கண், காது, மூக்கு மருத்துவ நிபுணர் குழுவினரான காது, மூக்கு, தொண்டை (ENT) துறைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் ரூட்டா சண்முகம் தலைமையில், பேராசிரியர் மருத்துவர் சண்முகம் மற்றும் பேராசிரியரும் துணை முதல்வருமான மருத்துவர் பாலாஜி சுவாமிநாதன் ஆகியோருடன் இணைந்து, மயக்கவியல் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் மருத்துவர் சந்தோஷ் மாதவன் மற்றும் உதவிப் பேராசிரியர் மருத்துவர் சீதாராமன் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சை அறை (OT) பணியாளர்களின் அர்ப்பணிப்பான குழுவினரால் சிறுவனின் மூக்கில் இருந்த பேனா மூடி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.மூச்சுக்குழாய் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவனின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் நலமாகவும், சீரான நிலையிலும், எந்தவித மூச்சுத் தொந்தரவும் இல்லாமல் வசதியாகவும் உள்ளார்.இந்த அறுவை சிகிச்சை குறித்து கல்லூரி முதல்வர் என் பாஸ்கரன் தெரிவித்தது:'இந்த சிகிச்சையின் வெற்றிக்கு, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான இந்த மூச்சுக்குழாய் அவசர நிலையை கையாள்வதில், மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சை அறை குழுவினரிடையேயான சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் குழுப்பணி முக்கிய காரணமாக அமைந்தது.சிறுவனின் பெற்றோர், தங்களது மகனுக்கு தக்க நேரத்தில் அவசர சிகிச்சை அளித்து வெற்றிகரமாக உயிரைக் காப்பாற்றிய காது மூக்கு தொண்டை, மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சை அறை குழுவினருக்கு தங்களது மனமார்ந்த மற்றும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்' என்றார்.மேற்கண்ட அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வரும் சிறப்பு அதிகாரியுமான மருத்துவர் என். பாஸ்கர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜூனியர் சுந்தரேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். Pen cap lodged in 15-year-old boy nose: Chidambaram Medical College Doctors removed itஆன்லைன் லாட்டரி விற்பனை! மன்னார்குடியில் 10 பேர் கைது!