தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பதக்கத்க்கும், 17 அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தின் பதக்கத்க்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றது. அத்துடன், வீரதீரச் செயலுக்கான பதக்கம் மற்றும் சிறப்பான பணிக்கான பதக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றது.இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்டவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படைகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 92 பேரும், வீரதீரச் செயலுக்கான பதக்கத்துக்கு 301 பேரும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 664 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் இருந்து குடியரசுத் தலைவர் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 3 பேரும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 17 பேரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.குடியரசுத் தலைவர் பதக்கம்ஜே. விஜய் ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடுகே. ராமச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடுஎஸ். குமார், உதவி கமாண்டன்ட், தமிழ்நாடுசிறந்த பணிக்கான பதக்கம்எஸ் மாலதி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடுஎஸ் பாஸ்கர், காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடுகே சிவசங்கர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடுஎம் சோமசுந்தரம், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடுபி கோவிந்தராஜு, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடுஎஸ் சண்முகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர், தமிழ்நாடுஜி பத்தருன்னிசா பேகம், காவல் ஆய்வாளர், தமிழ்நாடுசி மதிமாறன், காவல் ஆய்வாளர், தமிழ்நாடுகே சரஸ்வதி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடுபி மாரியப்பன், காவல் ஆய்வாளர், தமிழ்நாடுஎஸ் லட்சுமி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடுஜெயா இளவரசி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடுகே கோபால், காவல் ஆய்வாளர், தமிழ்நாடுஎஸ் மணிமாறன், உதவி கமாண்டன்ட், தமிழ்நாடுசி லட்சுமி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடுஆர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடுஎன் சதுரகிரி, காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடுPresidential Award for 3 Tamil Nadu police personnel!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை