திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, "வீட்டு வரியெல்லாம் ஏறிவிட்டதாம். அதனைப் பற்றி நமக்கென்ன கவலை. இனிமேல் நாம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். வாக்களித்தவர்கள்தானே காரணம்.அவர்களே அவர்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டால்தான் புத்தி வரும். பேருந்து நிலையங்களில் எல்லோரும் கஞ்சா அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்குக் காரணம் விசிலுக்கு (தவெக) வாக்களித்ததால்தான்.இனிவரும் காலங்களில் திமுக, அதன் வரலாறு, அனைவருக்கும் சீட் கொடுத்தது உள்ளிட்டவற்றைச் சொன்னால்தான் புத்தி வரும். சைதாப்பேட்டை தொகுதியில் அவர் (மா.சுப்பிரமணியன்) செய்தவற்றைப்போல வேறு எவரும் செய்ததில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியால்கூட அங்கே மருத்துவமனையைக் கொண்டுவர முடியவில்லை. ஆலந்தூர் பகுதியினருக்கும் இது பெரும் வசதியாக இருந்தது.அந்த மருத்துவமனையில் நோயாளியாகச் சென்றவர்களும், அவர்களின் உறவினர்கள் வாக்களித்திருந்தால்கூட நாம் (திமுக) ஜெயித்திருப்போம். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது" என்று தெரிவித்தார்.பாஜகவிடம் கொத்தடிமைகளாக திமுகவினர் சரண்: நிர்மல் குமார்Voters who defeated DMK will not have a good death, says DMK Leader R.S. Bharathi