Independence Day Celebration: National Flag Hoisted on Sri Natarajar Temple Tower! சிதம்பரம்: நாட்டின் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி, சனிக்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி, பொதுதீட்சிதர்கள் சனிக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர். படைத்து வெள்ளித்தட்டில் தேசியக்கொடியை எடுத்து வந்த தீட்சிதர்கள் பின்னர் மேளதாளத்துடன் கோயில் செயலாளர் ஜெ.ஜெயசூர்யா தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தில் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.Independence Day Celebration: Hoisted the National Flagon at the Sri Natarajar Temple Towerகோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!