2026 ஆம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர் விருதை" காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் வழங்கினார்.சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழக அரசின் விருதுகளை வழங்கினார்.இந்த விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கி முதல்வர் ஜோசப் விஜய் கெளரவித்தார்.இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.தந்தை கிருஷ்ணசாமி தகைசால் தமிழர் விருது பெற்றதும் மகளும் பாமக சட்டப்பேரவை உறுப்பினருமான சௌமியா அன்புமணி கைத்தட்டி மகிழ்ந்தார்.கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, கி. வீரமணி, முனைவர் குமரி அனந்தன், கே.எம். காதர் மொகிதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.Chief Minister Vijay presented the ‘Thagaisal Tamizhar’ award to Krishnasamy!கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!