சுதந்திர நாள்: உதயநிதி, கனிமொழி வாழ்த்து!

Wait 5 sec.

சுதந்திர நாளை முன்னிட்டு, திமுக தலைவர்கள் கனிமொழி, உதயநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று (ஆக. 15) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.தமிழக அரசு சார்பில் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில் சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர். தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களை போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், சுதந்திர நாள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:இந்தியத் திருநாட்டின் விடுதலை நாள் இன்று! விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம். பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம். இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று!விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம்.பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம்.… pic.twitter.com/DN4irs6lYe— Udhay (@Udhaystalin) August 15, 2026எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர… pic.twitter.com/cdkC6Psq0x— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 15, 2026ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்: மு.க. ஸ்டாலின் சுதந்திர நாள் வாழ்த்து!DMK leaders Kanimozhi and Udhayanidhi have extended their greetings on the occasion of Independence Day.