ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 426 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. டார்வினில் கடந்த ஆக.13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 101, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 84. மெஹிதி ஹாசன் 65 ரன்கள் குவித்தார்கள். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தற்போது, ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 21 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களுக்கு தடுமாறி வருகிறது. நன்றாக விளையாடி வந்த மார்னஸ் லபுஷேன் 31 ரன்களுக்கு சுழல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜேக் வெதரால்டு டக் அவுட், டிராவிஸ் ஹெட் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். 600ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு!Bangladesh bowled out for 426 runs in the first innings! Will Australia bounce back?