அர்ஜுனின் பிறந்த நாளில் புதிய பட போஸ்டர்!

Wait 5 sec.

நடிகர் அர்ஜுன் பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான பிளாஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த நாள்களில் டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்தன.இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தயாரிப்பு நிறுவனம் அர்ஜுன் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “பிறந்த நாள் வாழ்த்துகள் விராவி” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தில் இவர் நாயகனாக நடிக்கிறாரா அல்லது வில்லனாக நடிக்கிறாரா என்பது குறிப்பிடப்படவிலை என்பது கவனிக்கத்தக்கது. விரைவில் இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. The Divine Arrival of Team #Polimera3 wishes a very Happy Birthday to the Phenomenal Actor & Action King @akarjunofficial garu Unveiling the Striking First Look SoonA @DrAnilViswanath FilmProduced by @connect2vamsi, @SVCLLP#BharatNarang #JhanviNarang pic.twitter.com/Fph29YKQE5— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) August 15, 2026ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப் படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!New Telugu movie poster on action king Arjun's birthday!