600ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு!

Wait 5 sec.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.காலேவில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இந்திய அணி 10 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்துள்ளது. இதில் கே.எல். ராகுல் 13, ஜெய்ஸ்வால் 25 ரன்கள் எடுத்துள்ளார்கள். இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.இலங்கை: லஹிரு உதாரா, நிஷான் பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ.இந்தப் போட்டி இந்தியாவின் 600ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. KL Rahul and Yashasvi Jaiswal are opening the batting for #TeamIndia in a milestone game.Follow the updates live here - https://t.co/bg2q0J2x1f #SLvIND pic.twitter.com/Lb3UVIQEw7— BCCI (@BCCI) August 15, 2026Galle Test: India elects to bat in their 600th Test match!