சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை(ஆக 15) பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.1,13,760-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்து, ரூ.14,040-க்கும், பவுனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனையானது. மாலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயா்ந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையானது.இந்நிலையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை தங்கம் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து, ரூ.14,220-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.1,13,760-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை நிலவரம்வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.கடந்த ஆக. 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.Gold prices continue to rise; what about silver? – Price status for August 15!கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!