ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும் என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.நாடுமுழுவதும் சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று (ஆக. 15) சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.தமிழக அரசு சார்பில் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில் சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா! கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்! நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம்… pic.twitter.com/TeA3zZ0SQ9— M.K.Stalin (@mkstalin) August 15, 2026கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!DMK President and former Chief Minister M.K. Stalin has posted that our country's journey towards a bright future must succeed.