சுதந்திர நாள் விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோர், த்ரிஷா!

Wait 5 sec.

சென்னையில் முதல்வர் விஜய் கொடியேற்றிய சுதந்திர நாள் விழாவில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டார். நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் முதல் சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் நிகழும் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து முதல்வர் விஜய் புறப்பட்டார். மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டையை நோக்கி முதல்வர் விஜய் வந்தார்.அதன்பிறகு, கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். இதன் மூலமாக முதல்முறையாக கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் விஜய்யின் பெற்றோர், த்ரிஷா முதல்வர் விஜய் கொடியேற்றும் சுதந்திர நாள் விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டனர். மேலும் இந்த விழாவில் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார். விஜய்யின் பெற்றோர் இருக்கைக்கு அருகே அவருக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அணிவகுப்பில் முதல்வர் விஜய் சல்யூட் அடிக்க, த்ரிஷாவும் அவரைப் பார்த்து சல்யூட் அடித்தார். நிகழ்வு முடிந்து விஜய் செல்லும்போது விஜய்யின் பெற்றோர் மற்றும் த்ரிஷா, முதல்வருக்கு கையசைத்து வழியனுப்பி வைத்தனர். சுதந்திர நாள் விழாவில் த்ரிஷா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.