சுதந்திர நாள்! சொந்த கிராமத்தில் கொடியேற்றினார் அபிஜீத் தீப்கே!

Wait 5 sec.

சுதந்திர நாளை முன்னிட்டு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் கொடியேற்றினார். நாட்டின் 80 ஆவது சுதந்திர நாள் இன்று (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிரத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சந்துக் பிம்ப்ரியில் தேசியக் கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து, பள்ளிக்குழந்தைகள், கிராமவாசிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே மற்றும் சிஜேபி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதையடுத்து, தனது சொந்த கிராமமான சந்துக் பிம்ப்ரியில் இருந்து ஸ்கூல்திக்கரோ (பள்ளிகளைச் சீரமைப்போம்) எனும் பிரசாரத்தை அபிஜீத் தீப்கே தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரத்தின் மூலம், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த கிராம நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்குழந்தைகளைச் சந்தித்த அபிஜீத் தீப்கே அவர்களிடம் தங்கள் பள்ளிகளின் நிலைகள் குறித்த புகார்களைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டம் நாடு முழுவதும் ஆதரவைப் பெற்று பெரும் மாணவர் போராட்டமாக உருவானதால் மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.சுதந்திர நாள் விழா கோலாகலம்: தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!On the occasion of Independence Day, Abhijit Dipke, founder of the CJP, hoisted the flag in his native village in Maharashtra.