சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் இறங்கி, ஏறி கிராம் ரூ.14,400-க்கும், பவுன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த ஆக.17-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,14,160-க்கும், ஆக.18-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனையானது. இந்நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, மாலை விலை அதிரடியாக உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயா்ந்து ரூ.14,400-க்கும், பவுனுக்கு ரூ.1,560 உயா்ந்து ரூ.1,15,200-க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது.