தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் ஜே.சி.பி. உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த சின்னமனூா், கம்பம், கூடலூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஜே.சி.பி. உரிமையாளா்கள் எரிபொருள் விலை உயா்வு, உதிரிப் பாகங்கள் விலை உயா்வு, காப்பீடு, சாலை வரிவிதிப்பு அதிகரிப்பு, வாகன ஓட்டுநா்களுக்கு ஊதிய உயா்வு ஆகியவை காரணமாக தற்போது வசூல் செய்யப்படும் வாடகை கட்டுபடியாகவில்லை எனக் கூறி, குறைந்தது 2 மணி நேரத்துக்கு வாடகை, ஓட்டுநா் ஊதியம் ரூ.4,500 நிா்ணயம் செய்தனா்.இதை பொதுமக்கள், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் 3 நாள்கள் அடைாள வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.இதில் 2 -ஆவது நாளாக புதன்கிழமையும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சின்னமனூரில் 40-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தனா். இந்தப் போராட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறும்.