நடிகை அதிதி ஷங்கர் நடிகை அனுபமா நேர்காணலைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.நடிகை அதிதி ஷங்கர், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர் திரைப்படம் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது, அதிதியின் 4-வது திரைப்படமாகும். இஷ்டத்துக்கு நடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து குறைவாக நடித்தாலும் போதும் என்கிறார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை அதிதி ஷங்கரிடம், ‘உறவுகளில் சுலபமாக பச்சைகொடி (green flag), சிவப்பு கொடி (red flag) என வகைப்படுத்தப்படுகிறார்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அதிதி ஷங்கர், “அண்மையில் சக நடிகையொருவரின் பேச்சைக் கேட்டேன். அவர் சொன்னதில் பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், நான் தலை வணங்குகிறேன். அவர் பேசிய விஷயத்தை முக்கியமான விழிப்புணர்வாகவே பார்க்கிறேன். பல பெண்களும் ஆண்களும் இதே பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், இது தங்களுக்குத்தான் நடக்கிறதா எனத் தெரியாமலும் உள்ளனர்.” என்றார். அதிதி ஷங்கர் அனுபமா பரமேஸ்வரனின் பேச்சைக் குறிப்பிட்டே தன் கருத்துகளைக் கூறியிருக்கிறார். சில நாள்களுக்கு முன் நேர்காணலில் பேசிய அனுபமா தன் முன்னாள் காதலரால் சந்தித்த துன்புறுத்தல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில், “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.நினைத்துப் பாருங்கள், ஒருநாள் அவர் ரெமோ. அப்படியொரு காதல்... நாம் மிக கொடுத்த வைத்த ஆள் என்கிற அளவுக்கு கனவுகள் துளிர்க்கும். அடுத்த நாள், அந்நியனாகிவிடுவார்; மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும். பின், அம்பியாக மாறி அழுது, கெஞ்சி நம்மை சமாதானப்படுத்துவார். நடிகை மடோனா செபாஸ்டியன் தன் நார்ஸிஸ்ட் காதல் அனுபவங்கள் குறித்து பேசிய போதுதான், நாமும் இப்படியான சூழ்நிலையில்தான் இருக்கிறோம் என்பதை நினைத்து நடுங்கினேன்.” எனக் கூறியது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அதிதி ஷங்கர் பேசியதும் தற்போது கவனம் பெற்று வருகிறது. கௌரி கிஷனுடன் பயணிக்கும் பல பெண்கள்! ‘தாரகை’ முதல் தோற்ற போஸ்டர்!Actress Aditi Shankar has spoken about an interview given by actress Anupama.