கயாது - ஜி.வி. பிரகாஷின் இம்மோர்டல் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படம் இம்மோர்டல்.இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களுக்காக படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.இந்த நிலையில், இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.#Immortal from September 4 pic.twitter.com/XbSKMeCxbH— G.V.Prakash Kumar (@gvprakash) August 19, 2026கவின் - நயன்தாராவின் ஹாய் பட டிரைலர் அறிவிப்பு!https://x.com/gvprakash/status/2090040452913525042?s=20Censor certificate for G.V. Prakash's film Immortal has been released.