கர்நாடகத்தைவிட்டு வெளியேற்றுவோம்: டாக்ஸிக் நடிகருக்கு நடிகை எச்சரிக்கை

Wait 5 sec.

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தில் பெண்களை கண்ணியமற்ற நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளதாக கன்னட நடிகை ரிஷிகா சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், டாக்ஸிக் படத்தில் நடிகைகளை கண்ணியமற்ற நிலையில் காட்டியிருப்பதாக கன்னட நடிகை ரிஷிகா சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.டாக்ஸிக் படத்தின் டிரைலர் குறித்து ரிஷிகா சிங் விடியோ வெளியிட்டு கூறியிருப்பதாவது, "கன்னட சினிமா உலகளவில் வளர வேண்டும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், டாக்ஸிக் திரைப்படத்தின் டிரைலரில் பெண்களைச் சித்திரித்துள்ள விதம் மிகவும் வருத்தமளிக்கக் கூடியதாய் உள்ளது.படத்தில் 5 முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால், அவர்களில் யாரையாவது கண்ணியமாகவோ அழகாகவோ திரையில் காட்டியுள்ளார்களா? பாலிவுட் நடிகை கியாராவை அழைத்துவந்து இப்படித்தான் காட்டுவதா? இது ஒரு தவறான முன்னுதாரணம். இது பெண்களைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது.நிஜ வாழ்க்கையில் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனாகவும், தந்தையாகவும் இருக்கும் யஷ், திரையிலும் பெண்களை மதிக்கும் வகையில் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவில் பெண்களுக்கான உரிய மரியாதையும் கண்ணியமும் அளிக்கத் தவறினால், உங்களை கர்நாடகத்தை விட்டே வெளியேறச் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.ஏ சான்றிதழ் பெற்றுள்ள டாக்ஸிக், 3.14 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாக ஆக. 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.மீண்டும் இணையும் அஜித் குமார் - சிறுத்தை சிவா கூட்டணி?Actress Rishika Singh slams Yash’s Toxic over portrayal of women