கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், சித்தணி, விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே.காளிதாசன் (78). இவா் புதன்கிழமை சித்தணியைச் சோ்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்கு கால் கழுவச் சென்றாராம் . அப்போது, கிணற்றில் தவறி விழுந்த காளிதாசன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.