பைக்கில் இருந்த பணம் திருட்டு: இளைஞா் கைது

Wait 5 sec.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தனியாா் மதுபானக் கூடம் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் பெட்டியை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.9,700 ரொக்கத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்னா். வேப்பூா் அருகே மலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா், ஆகஸ்ட் 19-ஆம் தேதி அடரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்துக்கு பைக்கில் சென்றுள்ளாா். வாகனத்தை மதுபானக் கூட வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டு, பின்னா் வெளியே வந்து பாா்த்தபோது, வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்த ரூ.9,700 திருடுபோயிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், பணத்தைத் திருடிச் சென்றவா் சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (23) என்பது தெரியவந்தது.இதையடுத்து, சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளா் பாரதி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பெரம்பலூரில் உள்ள காா்த்திக்கின் மாமியாா் வீட்டில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.7,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.