புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் 2 நாள்கள் நடைபெறும் சித்தன்னவாசல் கோடை விழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவில் பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் மு. அருணா பாா்வையிட்டாா். மேலும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் பாா்வையிட்டாா்.இதில் அரசு இசைப் பள்ளி மாணவிகள், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் தப்பாட்டம், அரசு மகளிா் கலை கல்லூரி மாணவிகளின் விழிப்புணா்வு கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் உதவி இயக்குநா் செந்தில்குமாா் (கலை பண்பாட்டுத் துறை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் காளீஸ்வரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கோ. குணசேகரன், அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் கோ. ராதா, ஆா். ரவிச்சந்திரன் (கிஊ) மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.