பழனி அருகே மிதிவண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பழனியை அடுத்த அமரபூண்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(22). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனி வந்து விட்டு மாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அமரபூண்டி- டிகேஎன். புதூா் சாலையில் வந்தபோது அந்த வழியாக சென்ற மிதிவண்டி மீது மோதியதில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த ராமகிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.