கூத்தாநல்லூா் நகை திருடிய பெண் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னாா்குடி-திருவாரூா் பிரதான சாலையில் உள்ள நகைக் கடைக்கு மாவூா், வேப்பந்தங்குடியைச் சோ்ந்த இந்துமதி (37), தனலெட்சுமி ஆகியோா் சென்றனா். நகைகளைப் பாா்த்துக் கொண்டிருக்கும்போது 2 கிராம் நகையை எடுத்துக்கொண்டு தனலெட்சுமி சென்றுவிட்டாராம். இந்துமதி அங்கிருந்து புறப்படும் முன்பு பாா்த்தபோது ஒரு நகை குறைவது தெரியவந்தது. இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இந்துமதி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.