சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ப. வெங்கடரமணன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.சட்டப்பேரவையில் இன்று(ஆக. 20) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து, அமைச்சர் ப. வெங்கடரமணன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:உணவு தானியங்கள் சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31,000 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ. 81 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான தானியங்கி இருப்பு கண்காணிப்பு அமைப்பு (Monitoring System Automatic Stock) ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.அனைத்து உணவுப் பொருள்களின் தரத்தினை மதிப்பீடு செய்ய செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கைப்பேசி செயலி ரூ. 1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.பொது மக்களின் வசதிக்காகவும், பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்துவதற்காகவும் புதியதாக 150 நியாயவிலைக் கடைகள் பிரித்து அமைக்கப்படும்.முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக முக அங்கீகார வசதியுடன் (Face Authentication) கூடிய விற்பனை முனைய இயந்திரம் ரூ. 59 லட்சம் செலவில் முதல்கட்டமாக 150 நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் துறைகளை ஒருங்கிணைக்க, புதிய ஒன்றிணைந்த கண்காணிப்பு இணையதளம் (Unified Monitoring Web Portal) உருவாக்கப்படும்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் மற்றும் அமுதம் அங்காடிகளை கண்காணிக்க, அலுவலர்களுக்காக ஆய்வு செயலி உருவாக்கப்படும். நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்கு ஆய்விற்கான கைப்பேசி செயலி உருவாக்கப்படும். மாநில நுகர்வோர் சேவைக்காக தானியங்கி உரையாடல் (Chatbot) வசதியுடன் கூடிய வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்படும்.பொது மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு 81 மடிக்கணினிகள் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.Minister P. Venkataramanan announced new initiatives while replying to the debate on the demands for grants for the Food and Civil Supplies Department in the Legislative Assembly.ரூ. 7,015 கோடியில் சிங்கப்பெண்கள் கடன் திட்டம்... கூட்டுறவுத் துறைக்கு அமைச்சரின் புதிய அறிவிப்புகள்!