இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167 ரன்கள், கே.எல்.ராகுல் 82 ரன்கள், துருவ் ஜுரெல் 51 ரன்கள் எடுத்தனர்.இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளையும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஷிதா ஃபெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.சோனல் தினுஷா சதம்; இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் நிஷான் ஃபெர்னாண்டோ 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், தினேஷ் சண்டிமால் 4 ரன்கள், லகிரு உதாரா 27 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 14 ரன்கள், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 21 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இலங்கை அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதன் பின், சோனல் தினுஷா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த இணை 146 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த பார்ட்னர்ஷிப்பை பிரசித் கிருஷ்ணா உடைத்தார்.நிரோஷன் டிக்வெல்லா 80 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சோனல் தினுஷா சதம் விளாசினார். அவர் 168 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.இந்தியா தரப்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.இந்திய அணி இலங்கையைக் காட்டிலும் 178 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.The Sri Lankan team was bowled out for 284 runs in the first innings of the first Test match against India.டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!