சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜின் பதிலுரைக்கு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியது வைரலாகியுள்ளது.சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துப் பேசினார்.அப்போது, குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் 3.30 மணிக்கு பேசத் தொடங்கினார். தற்போது 52 நிமிடங்கள் ஆகிவிட்டது.சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளின் பதிலுரையாகத்தான் அவர் பேச வேண்டும், தேவையில்லாத பிரச்னையைப் பற்றி பேசக்கூடாது.நிறைய பேருக்கு சுகர் இருக்கு, மயங்கி மயங்கி விழுகிறார்கள். பயங்கர வேதனையாக இருக்கிறது. சமாளிக்க முடியவில்லை. இல்லையென்றால் பதிலுரையை காலையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.Former Chief Minister O. Panneerselvam's remarks in the Legislative Assembly, made in response to Health Minister Arunraj's reply, have gone viral online.மன்னிப்பு கேட்டு பேச்சைத் தொடங்கிய முதல்வர் விஜய்!