தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஆதி கும்பேஸ்வரர் யானை!

Wait 5 sec.

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கோல் மங்கலம் யானை தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது. சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலம் மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டு, நெற்றியில் மூவர்ண மலர்களை அணிந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர் தேசியக் கொடிக் கம்பத்தின் அருகே வந்த மங்கலம் யானை தனது துதிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தியது. நாட்டின் சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் யானை மங்கலம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய காட்சி அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதனைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனர்.இந்நிலையில், கோயில் சார்பில் அச்சடிக்கப்பட்ட சுதந்திர தின நோட்டீஸில் 80வது சுதந்திர தினம் என்பதற்குப் பதில் 79 வது சுதந்திர தினம் அன அச்சடிக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.