இலங்கை காலே திடலில் நடைபெற்று வரும் இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.போட்டி நடைபெற்று வந்த நிலையில் 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கியதால் உணவு இடைவேளை விடப்பட்டது. தற்போது, மழை நின்றாலும் ஆடுகளம் ஈரமாக இருப்பதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கே.எல். ராகுல் 32, தேவ்தத் படிக்கல் 35 ரன்களுடன் விளையாடி வந்தார்கள். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா, நிரோஷன் டிக்வெல்லா இணைந்து ஜெய்ஸ்வாலை ரன் அவுட் செய்து அசத்தினார்கள். இந்தப் போட்டி இந்தியாவுக்கு 600ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் வெற்றிக்கான உத்வேகத்தில் இருக்கிறது. இலங்கையில் அடிக்கடி மழை பொழியும் என்பதால் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். Lunch, and it's pouring down in Galle. @debasissen @IDFCFIRSTBank #SLvIND pic.twitter.com/ZXsCPNeuHT— RevSportz Global (@RevSportzGlobal) August 15, 2026India-Sri Lanka Test: Affected by rain!