அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே! சிறப்பு விடியோ வெளியீடு!

Wait 5 sec.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் படங்களின் புதிய பாகமான அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் ஆகிய படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் இயக்கத்தில் உருவாகும் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புதிய படம் “அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே”. மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான “டாக்டர் டூம்” கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் இப்படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், “அவெஞ்சர்ஸ் - டூம்ஸ் டே” படத்தின் ஸ்பெஷல் லுக் எனும் சிறப்பு விடியோவை இன்று (ஆக. 15) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் டிசம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், கேப்டன் அமெரிக்காவாக நடிகர் கிறிஸ் எவான்ஸ் மற்றும் தோர் கதாபாத்திரத்தில் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.வாட்ஸ்ஆப், கார் எண்கள் கசிவு: சபர்மதி படத்திற்காக கொலை மிரட்டல்களை எதிர்கொண்ட விக்ராந்த் மாஸி!A special video for the movie *Avengers: Doomsday* has been released.