மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை நிறுத்திவைக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.ராகுல் காந்தி அளவுக்கு அதிகமாக சொத்துக் குவித்திருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் விக்னேஷ் சிஷிர் என்பவர் தொடர்ந்த வழக்கில், சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.கடந்த மாதம் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அது தங்களுக்கு மனநிறைவு அளிப்பதாக இல்லை எனத் தெரிவித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிரமாணப் பத்திரத்தை நேரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.மேலும், சட்டவிரோத ஆதாரங்களை கண்டறிந்தால் சட்ட நடவடிக்கைகளை தொடங்கலாம் என்று சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது ராகுல் காந்தி தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பளிக்காதது ஏன் என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.”எந்தவொரு தனிநபரும் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பது குறித்து விசாரணை அமைப்புக்குத் தகவல் தெரிந்தால், அவர்கள் தானாகவே நடவடிக்கையைத் தொடங்கலாம் என்றும், அதற்கு நீதிமன்ற உத்தரவுகள் தேவையில்லை. ஆனால், இந்த குறிப்பிட்ட வழக்கில், விசாரணை அமைப்புகள் தாமாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைக்க வேண்டும் என்றும், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட வேறு எந்த அமைப்பும் நீதிமன்றத்தில் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது. Disproportionate assets case against Rahul - Supreme Court orders a halt to the CBI probeஎன்டிஏ தவறுக்கு மாணவர்களுக்கு தண்டனையா? நெட் ரத்துக்கு ராகுல் கண்டனம்!