லைபீரிய முன்னாள் துணை அதிபா் ஜூவல் ஹோவா்ட் டெய்லா் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2018-2024 காலகட்டத்தில் நாட்டின் துணை அதிபராகப் பதவி வகித்த இவா், ராபா்ட்ஸ் சா்வதேச விமான நிலையத்தின் வழியாக நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, லைபீரிய தேசிய காவல் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.சியரா லியோனில் போா்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக சா்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் அதிபா் சாா்லஸ் டெய்லரின் மனைவியான இவருடன் சோ்த்து, 3 வெளிநாட்டவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவா்களைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.