மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும் நீர்வளத்தை முறையாகப் பராமரிக்க முன்வந்துள்ள அந்த நகராட்சி, நீர் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்குத் தொடக்கப் புள்ளியாக அமையட்டும்.முந்தைய காலங்களில், குறிப்பாக கிராமங்களில் குளத்து நீரை கொண்டு வந்து அப்படியே வடிகட்டக் கூடச் செய்யாமல் அருந்திய காலம் உண்டு. நாகரிகப் பரிணாமத்தில் நிலம் திரிந்து அதனால் நீரும் திரியத் தொடங்கிய பின்னர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்ற கருத்தோட்டத்துக்கு வரத் தொடங்கினோம். இந்த நிலை மாறி வீட்டின் அனைத்துத் தேவைகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. இன்றைக்கு கிராமங்களில் யார் ஒருவரும் கிணறு எடுப்பது என்ற நடைமுறையே கிடையாது. இருக்கும் எந்தப் பொதுக் கிணறும் பராமரிக்கப்படுவதோ பயன்படுத்தப்படுவதோ கிடையாது. தேவைப்படும் தனி நபர்கள் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி பயன்படுத்திக் கொள்கின்றனர்.வீட்டு உபயோகத்துக்கு நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளில் மின்சார மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவோருக்கு அபராதம் விதிப்பது ரூ. 25 ஆயிரம் என அபராதம் நிர்ணயித்துள்ளார் உதகமண்டலம் நகராட்சி ஆணையர்.