குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 429 திருமணங்கள்: பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு

Wait 5 sec.

கேரளத்தில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாள்களில் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாத முகூர்த்த நாள்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். இந்த நாள்களில் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.இந்த நிலையில், ஆவணி மாத முகூர்த்த நாளான வருகிற ஞாயிற்றுக்கிழமையில் (ஆக. 23) குருவாயூர் கோயிலில் 426 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. மேலும், இதுவரையில் ஆக. 30-ல் 342 ஜோடிகளுக்கும், செப். 13-ல் 328 ஜோடிகளுக்கும் திருமணம் நடத்த முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நாள்களில் கோயிலில் திருமணங்களை தடை ஏதுமின்றி நடத்தவும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், போதிய வசதிகள் குறித்தும் கோயிலின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த 3 நாள்களிலும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, திருமண நிகழ்ச்சிகளும் 4 மணிமுதலே நடைபெறும். திருமணங்கள் நடத்த ஏதுவாக 6 மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மணமக்களுடன், புகைப்படக்காரர்கள் உள்பட 24 பேர் மட்டுமே மண்டபத்திற்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள்.அதுமட்டுமின்றி, கோயிலில் கூட்டம் அதிகமிருக்கும் காரணத்தால், கோயிலுக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி கிடையாது. கோயிலின் கிழக்கு நுழைவாயில் முழுவதுமாக ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பக்தர்கள் ஒரே திசையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.வரலட்சுமி விரதம் யாரெல்லாம் கடைப்பிடிக்கலாம்? நன்மைகள்!429 weddings in a single day at Guruvayur Temple