முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கை

Wait 5 sec.

முதல்வரின் அழகிய முகத்தைப் பார்க்க தனியாக ஒரு ஸ்க்ரீன் வேண்டும் என்று பேரவையில் தவெக எம்எல்ஏ கோரிக்கை முன்வைத்தார். மதுரை வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கல்லானை இன்று பேரவையில் தன்னுடைய தொகுதி சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இறுதியாக ஒரேயொரு தனிப்பட்ட கோரிக்கையை முன்வைப்பதாக பேரவைத் தலைவரிடம் தெரிவித்தார். "தலைவர் தளபதி எங்கு சென்றாலும் சிறுவயதில் ஓடோடிச் சென்று பார்த்து வளர்ந்த எங்களுக்கு இன்று அவரது அருகிலேயே அமரும் பாக்கியத்தை முதல்வர் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் அவருடைய முகத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. சாமி அமைச்சர் என்று அண்ணன் சொல்லும்போது முதல்வர் விஜய் குலுங்கிகுலுங்கி சிரித்ததை வீட்டிற்குச் சென்று டிவியில்தான் பார்த்தோம். எதிர்க்கட்சிகள் தன்னுடைய அரசைப் பற்றி குறை சொன்னால்கூட, அதில் காமெடி இருந்தால் சிரிக்கிற ஒரு தலைவன். அண்ணா வழி வந்த எங்கள் அண்ணாவின் அழகிய முகத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஸ்க்ரீன் ஏதாவது ஏற்பாடு செய்து தருமாறு என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையாக முன்வைக்கிறேன்" என்றார். A separate screen is needed to watch Chief Minister Vijay smile: TVK MLA requestஜோசியக்காரர் சொன்னால்தான் கோப்புகளை முதல்வர் விஜய் பார்ப்பாரா? பேரவையில் காராசார வாதம்!