பொதுத் துறை நிறுவனமான ரூர்கேலா உருக்கு ஆலையில் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரம் வருமாறு:பயிற்சி அறிவிப்பு எண்.: L & D/Adv./App/158பயிற்சி: Trade Apprenticeகாலியிடங்கள்: 421 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.உதவித்தொகை: மாதம் ரூ.10,560வயதுவரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.பயிற்சி: Graduate Apprenticeகாலியிடங்கள்: 275 தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.உதவித்தொகை: மாதம் ரூ.12,300வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.பயிற்சி: Technician Apprenticeகாலியிடங்கள்: 414உதவித்தொகை : ரூ.12,300தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும். 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு 1.9.2026 முதல் 26.9.2026 தேதி வரை நடைபெறும். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்த விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களுடைய கல்வித்தகுதி குறித்த விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். ஐடிஐ முடித்தவர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.8.2026Sail Recruitment 2026 for Apprentice Postsகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அலுவலக உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!