தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர் நிர்மல் குமாரும் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது.திமுக சார்பில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், ’கரூர் கம்பெனி’ எனக் குறிப்பிட்டு பேசினார்.அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ’மாண்புமிகு சங்கி அமைச்சர்’ என்று நிர்மல் குமாரை குறிப்பிட்டார். அதற்கு பதிலடி கொடுத்த நிர்மல் குமார், ‘மாண்புமிகு மூன்று மணிநேரம் பாத்ரூமில் உட்காந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்’ எனத் தெரிவித்தார்.இதனிடையே, கரூர் கம்பெனி என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் யார் எவ்வளவு நேரம் பாத்ரூமில் இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்துள்ளார்களா? முன்னாள் அமைச்சர் புள்ளி விவரங்களை பேசிக் கொண்டிருக்கும் போது முதலில் தவறாக பேசியது அமைச்சர்தான்” எனத் தெரிவித்தார்.Udhayanidhi - Nirmal Kumar War of Words in TN Assemblyதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!