லடாக்கில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Wait 5 sec.

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லடாக் உயர்நீதிமன்றம் கோடை காலத்தில் ஸ்ரீநகரிலும், குளிர்காலத்தில் ஜம்முவிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் லடாக் யூனியன் பிரதேச மக்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு ஸ்ரீநகர் அல்லது ஜம்முவுக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமித் ஷா 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. லடாக்கில் உயர்நீதிமன்ற கிளை அமைவதன் மூலம் லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலன் அடைவார்கள். தங்களுக்குரிய சட்ட சேவைகளைப் பெறுவதற்கு ஆகும் நேரத்தைக் குறைப்பதன் மூலம், நீதி கிடைப்பதற்கான வாய்ப்பை இந்த முடிவு கணிசமாக மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.மேலும், லடாக்கின் முழுமையான வளர்ச்சிக்கும், அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு முழு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். The Union Cabinet has approved the establishment of a Bench of the Jammu and Kashmir High Court in Ladakh. மோடி, வாஜ்பாய் 'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவத்தையும் பாடினார்களா? - கபில் சிபல் கேள்வி